கோர்ட்டு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த தொழிலாளி கைது
Worker arrested for preventing court employee from working
வேலூர்
வேலூர் கொணவட்டம் தேவிநகரை சேர்ந்தவர் துரை (வயது 52), கூலித்தொழிலாளி.
இவர் நேற்று சத்துவாச்சாரி கோர்ட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த கோர்ட்டு அலுவலக உதவியாளர் செல்வகுமாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து செல்வகுமார் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிந்து துரையை கைது செய்தார்.