கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கீழத்தெருவைச் சேர்ந்த சாமியா மகன் கிருஷ்ணசாமி (வயது 42). இரும்பு வியாபாரி. வடக்கு இலந்தைகுளம்கிராமத்தை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமனம் நடைபெற்றது. சிலநாட்களுக்கு பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணசாமி கேரளாவில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தார். நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.