பல்கலைக்கழக அளவிலான கூடைப்பந்து போட்டி: வ.உ.சி. கல்லூரி அணி வெற்றி
University level basketball tournament: V.OC. College team wins
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடந்தது. இந்த போட்டியில் 20 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நேற்று நடந்த இறுதி போட்டியில் கன்னியாகுமரி ஜெரோம்ஸ் கல்லூரி அணியும், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அணியும் விளையாடின. இதில் 80-55 என்ற புள்ளி கணக்கில் வ.உ.சிதம்பரம் கல்லுாரி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. பாளை சதக்கத்துல்லாஹ் கல்லூரி அணி மூன்றாமிடமும், நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரி அணி நான்காம் இடமும் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை கல்லூரி முதல்வர் வீரபாகு, பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை வ.உ.சி. கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவஞானம் செய்து இருந்தார்.