குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Gushing water at Cuortallam Falls - Tourists are prohibited from bathing

Update: 2022-11-15 14:20 GMT

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு கயிற்றை தாண்டி சென்று சிலர் புகைப்படம் எடுப்பதால், அருவிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்