நாலாட்டின்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து நேற்று பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், ஆளும் தி.மு.க. அரசை கண்டித்தும் கழுகுமலையில் கயத்தாறு மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை தலைவர்கள் மதிராஜசேகரன், முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொதுசெயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், லட்சுமணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து பால் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தியவாறு கட்சியினர் கோஷமிட்டனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் போஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சென்றாயபெருமாள், மாவட்ட நெசவாளர் பிரிவு மாரியப்பன், கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் மாடசாமி துணை தலைவர் விஸ்வநாகராஜன், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தமிழர்சிவா, மகளிரணி லூர்தம்மாள், இளைஞரணி ஒன்றிய தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று பா.ஜனதா கட்சியினர் மின்கட்டணம், சொத்துவரி மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்ட த்திற்கு நகரத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன், துணைத் தலைவர் பாலமுருகேசன், ஓபிசி அணி மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் கவிதா, மாவட்ட மகளிர் அணி தலைவர் கலையரசி, நகர சபை கவுன்சிலர் விஜயகுமார், நகர பொதுச்செயலாளர் அசோக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி பா.ஜனதா வடக்கு ஒன்றியம் சார்பில் பசுவந்தனை ரோடு நாடார் மேல்நிலைப்பள்ளி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலாளர் வசந்த ராஜ், மூப்பன்பட்டி பஞ்சாயத்து தலைவர் லிங்கேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் ஆர். பி. பாலு, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா தெற்கு ஒன்றியம் சார்பில் இனாம் மணியாச்சி சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம்
எட்டயபுரத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ், ஒன்றிய தலைவர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் புதூர் பஸ் நிலையம் முன்பும், வேம்பார் காமராஜர் சிலை முன்பும், விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பும் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்