தென்னை நார் பொருட்களின் விலை வீழ்ச்சியால் தொழிற்சாலைகளை மூடும் அபாயம்

Risk of factory closure due to fall in prices of coir products

Update: 2022-11-15 18:45 GMT

ஆனைமலை

பெட்ரோல், டீசல், மின்கட்டணம் உயர்வு மற்றும் தென்னை நார் பொருட்களின் விலை வீழ்ச்சி ஆகியவற்றால் தொழிற்சாலை களை மூடும் அபாயம் உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

தென்னை சாகுபடி

இந்தியாவில் தென்னை சாகுபடி பரப்பில் பொள்ளாச்சி இந்தியாவில் 2-வது இடமும், உற்பத்தியில் முதலிடமும் பெற்று உள்ளது.

இதன் காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை பகுதி யில் தென்னை நார் தொழில்கள் அதிகமாக உள்ளது. இதனால் பொள்ளாச்சி பகுதி தென்னை நார் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் 2-வது இடம் பெற்றுள்ளது.

ஆனைமலை தாலுகா பகுதிகளில் தென்னை மரத்தின் மதிப்பு கூட்டு பொருளாக தயாரிக்கும் 68 நார் தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழையால் தென்னை நார் தொழில்கள் முற்றிலும் முடங்கி உள்ளன.

நிறம் மாறி விடும்

அந்த வகையில் தென்னை நார்களை காய வைப்பது, மரத்தில் இருந்து தேங்காய் பறிப்பது, உரிப்பது, கயிறு திரிப்பது, கொப்பரை தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதில் வெள்ளை நிற தென்னை நாருக்கு அதிக விலை கிடைக்கிறது. இந்த வகை நார்கள் தயாரிப்பதை ஒரே நாளில் செய்ய வேண்டும்.

இடையில் மழை பெய்தால் நனைந்து நாரின் நிறம் மாறிவிடும். அப்படி மாறினால் உரிய விலை கிடைக்காது. மேலும் அந்த நார்களை வைத்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கவும் முடியாத நிலை ஏற்படும்.

தொழிற்சாலைகள் முடங்கின

இது போல் காய்ந்த மட்டைகளில் இருந்து பழுப்பு நிற நார் தயாரிக்க நல்ல வெயில் அடிக்க வேண்டும். அப்போது தான் மட்டைகளை நன்கு காய வைக்க முடியும். ஆனால் தற்போது மழை பெய்வதால் அந்த தொழிற்சாலைகள் அடியோடு முடங்கி உள்ளது.

வெளிநாட்டில் முறைப்படுத்தப்பட்ட வேளாண் உற்பத்தி பண் ணைகளில் ஆதார பொருளாக காயர் பித் உள்ளது.

அதாவது இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் காயர்பித் கட்டிகளை (தென ்னை நார் துகள்) உடைத்து அதன் மேல் விவசாயம் செய்கின்ற னர்.

தென்னை மட்டைகளை உரிப்பது தொடங்கி அதை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் காயர்பித் ஏற்றுமதி அடியோடு குறைந்து உள்ளது.

பொருளாதார மந்தநிலை

இதனால் தென்னை நார் உள்பட அதை சார்ந்த தொழில்கள் முடங்கி உள்ளன. உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக் காமல் தேங்கி கிடக்கிறது.

இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் அந்த தொழில்களில் ஈடுபட்டு உள்ள தொழி லாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து தென்னை நார் தொழிற்சாலை துறையினர் கூறியதா வது:-

கட்டணம் பல மடங்கு உயர்வு

இந்த ஆண்டு மழை காரணமாக தென்னை நார் பொருட்களின் உற்பத்தி குறைந்து உள்ளது. அதே நேரத்தில் அவற்றின் விலையும் குறைந்து உள்ளது. வெள்ளை நிற மற்றும் பழுப்பு நிற நார் உள் ளிட்ட பொருட்கள் கயிறு, சோபா, மேட் தயாரிக்க பயன்படுத்தப் படுகின்றன.

அவை வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தென்னை நார் பொருட்கள் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

ஆனால் ஆட்கள் பற்றாக்குறை, டீசல், பெட்ரோல், மின் கட்டணம் ஆகியவை பல மடங்கு உயர்ந்து உள்ளது. தயாரிப்பு பொருட்களை கொண்டு செல்ல கன்டெய்னர் லாரிகளும் கிடைக்காத நிலை உள்ளது.

விலை குறைந்தது

இது போன்ற காரணங்களால் ஆனைமலை தாலுகா பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளை மூடும் அபாயம் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் காயர் பித் கட்டிகள் ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. இதனால் தற்போது 20 சதவீதம் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

இதன் காரணமாக தென்னை நார் உள்ளிட்ட பொருட்கள் தேக் கம் அடைந்து உள்ளது. 30 கிலோ எடை கொண்ட வெள்ளை நிற தென்னை நார் பண்டலுக்கு ரூ.550 விலை குறைந்து உள்ளது. பழுப்பு நிற தென்னை நார் பண்டலுக்கு ரூ.300 விலை குறைந்து உள்ளது.

மேலும் செய்திகள்