தீக்குளித்து பெண் தற்கொலை

முத்துப்பேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-15 18:58 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவருடைய மனைவி கவுதமி(வயது32). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று கோவிந்தராஜூக்கும், கவுதமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கவுதமி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்