ஆடிப்பூர கஞ்சிகலய ஊர்வலம்

வேடசந்தூரில் ஆடிப்பூர கஞ்சிகலய ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-08-14 16:58 GMT

வேடசந்தூரில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், உலக நலன் வேண்டி ஆடிப்பூர கஞ்சிகலய ஊர்வலம் நடந்தது. முன்னதாக மழைவளம், விவசாயம் செழிக்கவும், உலக நலன் வேண்டியும் வழிபாட்டு மன்ற பக்தர்கள் தீச்சட்டி, முளைப்பாரியுடன் கஞ்சிகலய ஊர்வலம் நடந்தது. நேருஜிநகர், ஆர்.எச்.காலனி, வடமதுரை ரோடு, பஸ்நிலையம், ஆத்துமேடு, மார்க்கெட் ரோடு வழியாக மீண்டும் வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்