அரசு அதிகாரி வீட்டில் திருட்டு

சாணார்பட்டி அருகே அரசு அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-09 15:52 GMT

சாணார்பட்டி அருகே உள்ள சிலுவத்தூரை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 75). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அவருடைய மனைவி பாத்திமாமேரி. நேற்று முன்தினம் காலை இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு மருத்துவ சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் சென்று விட்டு மீண்டும் இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கணவன்-மனைவி வெளியே சென்றதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பணம், நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கதவு, பீரோவில் பதிவான ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதேபோல் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்