"நீட் தேர்வு போராட்டம் நாடகமாகவே இருந்தாலும் அதிலாவது ஈபிஎஸ் பங்கேற்று இருக்கலாமே?" அமைச்சர் உதயநிதி கேள்வி
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை,
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக நடத்திய நீட் தேர்வு போராட்டம் நாடகம் என எதிர்க்கட்சித்தலைவர் கூறியது குறித்து அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;
"நீட் தேர்வு போராட்டம் நாடகமாகவே இருந்தாலும் அதிலாவது ஈபிஎஸ் பங்கேற்று இருக்கலாமே. நீட் வேண்டாம் என்று அவர்களும் கோரிக்கை வைத்து இருந்தனர். நீட் தேர்வு போராட்டத்தின் போது ஈபிஎஸ்-க்கு 2 கோரிக்கைகளை முன்வைத்தோம். உங்கள் கட்சியில் இருந்து ஒரு பிரதிநிதியை அனுப்பி வையுங்கள்.
ஒருவேளை நீட் ரத்தானால் அதற்கான பாராட்டை ஈபிஎஸ் எடுத்துக் கொள்ளலாம் என கூறினோம். நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என கவர்னரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கு யாராவது கருத்து சொன்னார்களா? என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி பதில் அளித்துள்ளார்.