முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை

கோத்தகிரி முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை நடந்தது.

Update: 2023-08-22 20:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி டானிங்டன் பகுதியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இதேபோல் கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில், நட்டக்கல் முருகன் கோவில் மற்றும் தங்கமலை முருகன் கோவில்களிலும் மாதாந்திர சஷ்டி பூஜை நடைபெற்றது. இதில் விரதமிருந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில், கீழ் அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்