விவோ எக்ஸ் 80 ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் மிகவும் பிரபலமான விவோ தற்போது எக்ஸ் 80 மற்றும் எக்ஸ் 80 புரோ என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-06-02 11:35 GMT

இவை இரண்டும் 6.78 அங்குல கியூ ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம், 12 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு 12 பன்டச் இயங்குதளம் கொண்டது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. 50 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமும், 32 மெகா பிக்ஸெல் கேமரா முன்புறம் உள்ளது. திரையில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 80 வாட் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது. எக்ஸ் 80 மாடல் விலை சுமார் ரூ.54,999. புரோ மாடல் சுமார் ரூ.79,999.

Tags:    

மேலும் செய்திகள்