பேட்டரி ரிக்‌ஷாவின் தந்தை

ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை பார்த்து, அதனை எளிமையாக பயன்படுத்துவது பற்றி சிந்தித்து இந்தியாவின் முதல் மின்சார ரிக்‌ஷாவை உருவாக்கியவர், விஜய் கபூர்.

Update: 2022-09-29 14:48 GMT

73 வயதாகும் இவர், கான்பூர் ஐ.ஐ.டி.யில் படித்தவர். ஆட்டோ மொபைல் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர், 2011-ம் ஆண்டு எலெக்ட்ரிக் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அடுத்த ஆண்டே தனது நிறுவனத்தின் சார்பில் முதன் மின்சார ரிக்‌ஷாவை தயாரித்தார்.

அதற்கான காரணத்தை விவரிப்பவர், "கடந்த 2010-ம் ஆண்டு புதுடெல்லியில் உல்ள சாந்தினி சவுக் பஜார் பகுதியில் சைக்கிள் ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. அந்த நெரிசலான சாலையில் நான் பயணித்த ரிக்‌ஷாவை ஓட்டியவர் ரொம்பவே கஷ்டப்பட்டதை கவனித்தேன்.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோமொபைல் துறையில் நான் பெற்ற அனுபவத்தை வைத்து ரிக்ஷா ஓட்டுபவர்களின் கஷ்டத்தை எளிதாக்கும் வகையில் மின்சார ரிக்‌ஷாவை உருவாக்கினேன். கை ரிக்‌ஷா மற்றும் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதனை உருவாக்கினேன்" என்கிறார்.

முதல் முறையாக பேட்டரியில் இயங்கும் ரிக்‌ஷாவை உருவாக்கியதால், மின்சார ரிக்ஷாவின் தந்தை என்று விஜய்யை அழைக்கின்றனர். இன்றைக்கு மின்சார வாகனங்கள் இந்தியாவில் பெருமளவில் தயாரிக்கப்படுவதற்கு இவரே முன்னோடி.

Tags:    

மேலும் செய்திகள்