தின்தோஷியில் பஸ் டிரைவரை 2 பேர் தாக்கும் வீடியோ; போலீசில் புகார்
தின்தோஷியில் பஸ் டிரைவரை 2 பேர் தாக்கும் வீடியோ வெளியானதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மும்பை,
மும்பை கோரேகாவ் தின்தோஷி பகுதியில் நேற்று பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற காரின் மீது பஸ் உரசியதாக தெரிகிறது. இதனால் காரில் இருந்த 2 பேர் பஸ்சின் உள்ளே ஏறினர். பின்னர் பஸ் டிரைவரை அவதூறாக பேசினர். இதற்கு டிரைவர் எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில் திடீரென தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து இறங்கி சென்றனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஒருவர் வீடியோவாக செல்போனில் பதிவு செய்தார். பின்னர் சமூகவலைத்தளம் மூலம் போலீசாருக்கு அனுப்பி டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வீடியோ குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.