புதிய முகங்களை ஆதரிக்க வேண்டிய நேரமிது: அதிருப்தியாளர்களுக்கு கட்சியின் கதவு அடைக்கப்படும் - சரத்பவார் பேட்டி

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியாளர்களுக்கான கதவு அடைக்கப்படும் என்று சரத்பவார் கூறினார். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2023-09-11 18:45 GMT

மும்பை, 

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியாளர்களுக்கான கதவு அடைக்கப்படும் என்று சரத்பவார் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அண்ணன் மகனுமான அஜித்பவார் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் இணைந்தார். இதனால் அந்த கட்சி பிளவுப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்சி கதவு அடைக்கப்படும்

மராட்டிய அரசில் இணைந்தவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பினால் என்ன செய்வது என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அதுபற்றி நாங்கள் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. கட்சியில் புதியவர்களுக்கு தேர்தலுக்கு முன்பு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. அதிருப்தியாளர்களுக்கு கட்சியின் கதவு அடைக்கப்படும். தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி ஒரு ஊழல் கட்சி என்று தெரிவித்தார். ஆனால் அவர்கள் யாரை நோக்கி ஊழல்வாதி என்று கைநீட்டினாரோ அவர்களையே பின்னர் கூட்டணியில் சேர்ந்துகொண்டார். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு கொள்கை ரீதியானவர் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

மக்கள் ஏற்க மாட்டார்கள்

மாநிலத்தில் நடந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற கட்சிகளை உடைத்து இதுபோன்ற அரசுகளை அமைப்பதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணியில் இணைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, அந்த கட்சி ரூ.70 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்