கல்வாவில் 10-ம் வகுப்பு மாணவியை மானபங்கம் செய்த ஆசிரியர் கைது
கல்வா பகுதியில் 10-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்
தானே,
தானே மாவட்டம் கல்வாவில் உள்ள பள்ளியில் ஓவிய பயிற்சி ஆசிரியராக இருப்பவர் யோகேஷ் அகிரே. இவர் அங்கு படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவியை மானபங்கம் செய்தார். இதனை தடுத்தபோது யோகேஷ் அகிரே மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் மனஉளைச்சல் அடைந்த மாணவி சக மாணவிகள் உதவியுடன் சம்பவம் குறித்து பள்ளி முதல்வரிடம் தெரிவித்தார். இதன்படி ஓவிய பயிற்சி ஆசிரியரிடம் நடந்த சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் விளக்கம் கேட்டு இருந்தார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.