சோயாபீன் விவசாயிகளுக்கு சிறப்பு நிதி; முதல்-மந்திரிக்கு, முங்கண்டிவார் வலியுறுத்தல்
சோயாபீன் விவசாயிகளுக்கு சிறப்பு நிதி உதவி வழன்ஹ்குமாறு முதல்-மந்திரிக்கு, மந்திரி சுதிர் முங்கண்டிவார் வலியுறுத்தி உள்ளார்
சாந்திராப்பூர்,
சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் சோயாபீன் பயிர்கள் மஞ்சள் மோசை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சந்திராப்பூர் மாவட்ட பொறுப்பு மந்திரி சுதிர் முங்கண்டிவார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சந்திராப்பூர் மாவட்டத்தில் 67 ஆயிரத்து 766 ஹெக்டேரில் சோயாபீன் பயிரிடப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த மாதம் மஞ்சள் மோசை நோய் தொற்றுக்கு இந்த பயிர்கள் ஆளாகி உள்ளன. பல கிராமங்களுக்கு சென்று சோயாபீன் விவசாயிகளிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினேன். இந்த நோய் தொற்று காரணமாக சோயாபீன் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு உதவிகரமாக சிறப்பு நிதி தொகுப்பை அரசு அறிவிக்கவேண்டும் என்று முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.