ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை அமைக்க கூடாது- காங்கிரஸ் எதிர்ப்பு

ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை அமைக்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-07-08 16:34 GMT

மும்பை, 

ஏக்நாத்ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் அரசு பதவி ஏற்ற முதல் நாளே மெட்ரோ பணிமனை திட்டத்தை காஞ்சூர்மார்க்கில் இருந்து ஆரேகாலனிக்கு மாற்றியது. இதற்கு சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி மற்றும் சமூகஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை கட்ட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மும்பை காங்கிரஸ் தலைவா் பாய் ஜக்தாப் வெளியிட்ட அறிக்கையில், "ஆரே காலனி மும்பையின் சுவாசமாக உள்ளது. அது தான் மும்பையின் நுரையீரல். வனப்பகுதியை அழித்தும், மரங்களை வெட்டியும் ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை அமைக்க வேண்டும் என மத்திய அரசும், தேவேந்திர பட்னாவிசும் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் அழியும். எனவே இந்த திட்டம் எல்லா தரப்பாலும் எதிர்க்கப்படுகிறது. மும்பைவாசிகளுக்கு ஆரேகாலனியில் இந்த திட்டம் தேவையில்லை. மெட்ரோ பணிமனை காஞ்சூர்மார்க்கில் தான் அமைக்கப்பட வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்