போலீஸ்காரரை தாக்கிய 3 பேருக்கு ஒரு நாள் ஜெயில்

போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு ஒரு நாள் ஜெயில் தண்டனையும், அபராதமும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-09-24 20:00 GMT

தானே, 

தானேயை சேர்ந்த போக்குவரத்து போலீஸ்காரர் பிரபாகர் பாட்டீல். இவர் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அங்குள்ள சாலையில் வாகன கண்காணிப்பு பணியில் இருந்தார். அப்போது சாலைவிதிமுறை மீறிய நிலையில் டெம்போ ஒன்று அதிவேகமாக வந்தது. இதனை கண்ட அவர் டெம்போவை வழிமறித்து அபராதம் செலுத்துமாறு தெரிவித்தார். அப்போது டெம்போவில் இருந்த திரிலோக்நாத் சவுபே (வயது53), கிருஷ்ணா குடில் (79), ஆனந்த் சவுபே (49) ஆகியோர் சேர்ந்து போக்குவரத்து போலீஸ்காரர் பிரகாபர் பாட்டீலை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார். சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து 3 பேருக்கும் ஒரு நாள் ஜெயில் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்