கார் ரோடு ஆகாய நடைபாதை மேம்பாலத்தில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை
கார் ரோடு ஆகாய நடைபாதை மேம்பாலத்தில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கொலை செய்யபட்டு கிடந்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
மும்பை,
மும்பை பாந்திரா டெர்மினல் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக விக்ரம் சிங் (வயது35) வேலை பார்த்து வந்தார். இவர் வேலையை முடித்து கொண்டு வழக்கம் போல் கார் ரோடு ஆகாய நடைபாதை மேம்பாலத்தில் படுத்து உறங்குவதுண்டு. கடந்த 19-ந்தேதி அதிகாலை நடைபாதை மேம்பாலத்தில் படுத்து உறங்கிய விக்ரம் சிங் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் விக்ரம் சிங் முறையான உரிமம் இன்றி சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வந்ததாகவும், அவருக்கு சில பேரிடம் முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.