ஜி.எஸ்.பி. மண்டலில் மோகன் பகவத் வழிபாடு
கிங் சர்க்கிள் அருகில் உள்ள ஜி.எஸ்.பி. மண்டலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வழிபாடு செய்தார்
மும்பை,
மும்பை கிங் சர்க்கிள் அருகில் புகழ்பெற்ற ஜி.எஸ்.பி. மண்டல் விநாயகர் சிலை, நாட்டின் பணக்கார விநாயகர் சிலையாக பார்க்கப்படுகிறது. 66 கிலோ கிலோ தங்க மற்றும் 295 கிலோ வெள்ளி ஆபரணங்களுடன் ஜொலிக்கும் விநாயகரை காண மக்கள் இங்கு படையெடுகின்றனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் நேற்று இந்த மண்டலுக்கு வந்ததுடன், விநாயகர் சிலையை பார்வையிட்டு வணங்கினார். இதேபோல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் இந்த மண்டலுக்கு சென்று விநாயகரை வழிபட்டார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் புனேயில் உள்ள புகழ்பெற்ற தத்துஷேத் மண்டலில் மோகன் பகவத் சிறப்பு பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.