புனேயில் இரு சக்கர வாகன சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ- 25 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

புனேயில் இரு சக்கர வாகனத்தின் சர்வீஸ் மையத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 25 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.

Update: 2023-10-05 18:45 GMT

புனே, 

புனேயில் இரு சக்கர வாகனத்தின் சர்வீஸ் மையத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 25 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.

தீ விபத்து

புனே சிங்காட் சாலையில் இரு சக்கர வாகனத்தின் சர்வீஸ் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று காலை 7.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்றனர். சர்வீஸ் மையத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர்.

எரிந்து நாசம்

இந்த தீ விபத்தில் சர்வீஸ் மையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 25 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. இருப்பினும் விபத்தில் யாரும் காயமடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வீஸ் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் எரிந்து போனதால் அதன் உரிமையாளர்கள் அங்கு திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்