'இந்தியா' கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமில்லாதது- சஞ்சய் ராவத் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா' கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமில்லாதது என சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை,
'இந்தியா' கூட்டணி தலைவர்கள் கூட்டம் நேற்று மும்பையில் தொடங்கியது. இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-
ராகுல் காந்தி சமரசமற்ற தலைவர். ராகுல் காந்தி தலைமையின் கீழ் நாடு பணியாற்ற விரும்புகிறது.
பா.ஜனதா கட்சியில் பயம் நிலவுகிறது. 'இந்தியா' கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறுவது கடினம் மட்டுமல்ல, சாத்தியமில்லாதது. நாட்டின் முன் செயல் திட்டத்துடன் செல்ல உள்ளோம். எங்கள் கூட்டணியில் நாட்டு பற்று, நாட்டை காக்க வேண்டும் என்ற உணர்வுடன் அனைவரும் உள்ளனர். எனவே கூட்டணியை யாரும் உடைக்க மாட்டார்கள். கூட்டணி கட்சிகளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.