தேர்தலில் வெற்றி பெற காங்கிரசுக்கு குஜராத் கடினமான மாநிலம்- மிலிந்த் தியோரா கருத்து

தேர்தலில் வெற்றி பெற குஜராத் கடினமான மாநிலம் என முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மிலிந்த் தியோரா கூறியுள்ளார்.

Update: 2022-07-16 17:50 GMT

மும்பை, 

தேர்தலில் வெற்றி பெற குஜராத் கடினமான மாநிலம் என முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மிலிந்த் தியோரா கூறியுள்ளார்.

தேர்தல் பார்வையாளர்

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநில தேர்தலில் காங்கிரஸ் மேலிடப் மேற்பார்வையாளராக மும்பையை சேர்ந்த முன்னாள் எம்.பி. மிலிந்த் தியோரா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் தேர்தல் குறித்து அவர் கூறியதாவது:-

தேர்தலில் கட்சிக்கு சரியான வியூகங்களை அமைக்கவும், களத்தில் ஒற்றுமையை உறுதி செய்யவும், கடந்த தேர்தலின் போது நடந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க நான் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளேன். எல்லாம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வது தான் மேற்பார்வையாளரின் பொறுப்பு.

வெற்றி கடினம்

இது எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு. என்னால் முடிந்தவரை அதை சரியாக செய்வேன். இந்த முறை வெற்றியை உறுதி செய்ய முயற்சி செய்வேன். எனக்கு இந்த பொறுப்பை வழங்கி என் மீதான நம்பிக்கையை கட்சி வெளிப்படுத்தி உள்ளது. நாங்கள் தேர்தல் யூகங்களை ஆய்வு செய்து அதில் மாற்றம், திருத்தங்களை செய்வோம். எங்களுக்கு சவால்கள் உள்ளன. ஆனால் அவை சாதிக்க முடியாதவை அல்ல. தேர்தலில் வெற்றி பெற குஜராத் கடினமான மாநிலம். ஆனால் அது சாதிக்க முடியாது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்