தானே அருகே மாநகராட்சி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கசிந்ததால் பரபரப்பு

தானே அருகே உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-10-15 19:15 GMT

தானே, 

தானே வாக்ளே எஸ்டேட் ஸ்ரீநகர் பகுதியில் மாதோஸ்ரீ கங்குபாய் சம்பாஜி ஷிண்டே என்ற மாநகராட்சி ஆஸ்பத்திரி உள்ளது. நேற்று நள்ளிரவு 12.25 மணி அளவில் ஆஸ்பத்திரியில் இருந்த 390 கிலோ எடையுள்ள ஆக்சிஜன் சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் அங்கிருந்த மற்றொரு சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டது. கசிவு ஏற்பட்ட சிலிண்டரில் சோதனை நடத்தியதில் வால்வு வளைந்து அதன் வழியாக கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடம் கழித்து கசிவை சரி செய்தனர். ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தானே மாநகராட்சியினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்