ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு மந்திரி பதவியில் இருந்து அப்துல் சாத்தரை நீக்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு தொடர்பாக அப்துல் சாத்தரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-08-28 13:52 GMT

மும்பை,

ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு தொடர்பாக அப்துல் சாத்தரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு

மராட்டியத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இந்தநிலையில் சமீபத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்களின் பட்டியலில் மாநில வேளாண்துறை மந்திரி அப்துல் சாத்தர், ரமேஷ் போர்னரே எம்.எல்.ஏ. மகள்களின் பெயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

நீக்க வேண்டும்

இதையடுத்து அப்துல் சாத்தரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் மாநில தலைவர் நானா படோலே கூறுகையில், "அப்துல் சாத்தர், ரமேஷ் போர்னரேவின் நெருங்கிய உறவினர்கள் பெயர் ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேட்டில் இடம் பெற்று உள்ளது. இதனால், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடும் நடவடிக்கை எடுப்பார் என உறுதியாக கூறுகிறேன்.

அவர் இந்த மோசடியில் அதிக பயனடைந்தவர்களை கண்டறிய வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்