அமராவதியில் பயங்கர விபத்து; மலை பள்ளத்தாக்கில் கார் பாய்ந்து 4 பேர் பலி
அமராவதியில் மலை பள்ளத்தாக்கில் கார் பாய்ந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.
அமராவதி,
அமராவதியில் மலை பள்ளத்தாக்கில் கார் பாய்ந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.
மலை பள்ளத்தாக்கில்...
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 8 பேர் கார் ஒன்றில் மராட்டியத்திற்கு வந்தனர். சுற்றுலா தலமாக விளங்கும் அமராவதி மாவட்டம் சிக்கல்தாரா மலைப்பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அந்த கார் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. எதிர்பாரத விதமாக அந்த கார் சாலையோர பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இதில் கார் அந்தர் பல்டி அடித்து உருண்டோடியது. காரில் இருந்தவர்கள் மரண ஓலம் எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார் மீட்பு படையினருடன் விரைந்து வந்தனர்.
4 பேர் பலி
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் துரிதமாக ஈடுபட்டனர். இருப்பினும் 4 பேரை பிணமாக தான் மீட்க முடிந்தது. மேலும் 4 பேர் படுகாயமடைந்து கிடந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.