அந்தேரி கேளிக்கை விடுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய பெண் உள்பட 3 பேர் கைது

அந்தேரி பகுதியில் உள்ள கேளிக்கை விடுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-09-02 19:45 GMT

மும்பை, 

மும்பை அந்தேரியில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் பெண் ஒருவருடன் 2 பேர் வந்திருந்தனர். அப்போது விடுதியில் இருந்த ஊழியருடன் அப்பெண்ணிற்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பெண்ணுடன் வந்த ஒருவர் திடீரென விடுதி ஊழியரை பிடித்து தாக்கினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்றவர்கள் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அவர்களை சுட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். இது பற்றி தகவல் அறிந்த அம்போலி போலீசார் அங்கு சென்று பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தாக்குதலில் காயமடைந்த ஊழியரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். மேலும் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்