விக்ரோலியில் பெண் போலீசை மானபங்கம் செய்த மைனர் வாலிபர் உள்பட 3 பேர் கைது

விக்ரோலியில் பெண் போலீசை மானபங்கம் செய்த மைனர் வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2023-10-01 18:45 GMT

மும்பை, 

விக்ரோலியில் பெண் போலீசை மானபங்கம் செய்த மைனர் வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பெண் போலீஸ் மானபங்கம்

மும்பை விக்ரோலி பார்க்சைட், சூர்யாநகர் பகுதியில் உள்ள எல்.பி.எஸ். ரோட்டில் சம்பவத்தன்று இரவு பெண் போலீஸ் ஒருவர் தோழியுடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த மைனர் வாலிபர் ஒருவர் பெண் போலீசை உடலில் தொட்டு மானபங்கம் செய்தார். பெண் போலீஸ் அந்த வாலிபரை மடக்கி பிடித்தாா். இந்தநிலையில் அங்கு வந்த 2 பேர் அங்கு நடந்த மத ஊர்வல கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் போலீசின் பிடியில் இருந்து மைனர் வாலிபரை தப்ப வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பெண் போலீஸ் பார்க்சைட் போலீசில் புகார் அளித்தார். மேலும் மைனர் வாலிபர் பெண் போலீசை மானபங்கம் செய்துவிட்டு தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகளும் சமூகவலைதளத்தில் பரவியது.

3 பேர் கைது

இதற்கிடையே பெண் போலீசை மானபங்கம் செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி வலதுசாரி இயக்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் பார்க்சைட் போலீஸ் நிலையம் மற்றும் விக்ரோலி ரெயில் நிலையம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் போலீசை மானபங்கம் செய்த மைனர் வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு மைனர் வாலிபர் உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்