நவிமும்பை மார்க்கெட்டில் தக்காளி திருட முயன்ற 2 தொழிலாளர்கள் பிடிபட்டனர்

மும்பை நவிமும்பை மார்கெட்டில் நள்ளிரவில் தக்காளி திருடிய 2 பேர் பிடிபட்டனர்.

Update: 2023-07-18 19:00 GMT

மும்பை, 

நவிமும்பை வாஷியில் மிகப்பெரிய சந்தையான ஏ.பி.எம்.சி. மார்க்கெட் உள்ளது. இங்கு சம்பவத்தன்று அதிகாலை 2 மணி அளவில் தக்காளியை தொழிலாளர்கள் 2 பேர் நைசாக திருட முயன்றனர். இதற்காக 90 கிலோ தக்காளி பெட்டிகளை அவர்கள் வெளியே இழுத்து வந்தனர். இதை கவனித்த காவலாளிகள் அந்த தொழிலாளர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் காவலாளிகள் அருகில் உள்ள ஏ.பி.எம்.சி. போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலாளர்கள் 2 பேரும் தக்காளியை திருட முயன்றது தெரியவந்தது. இருப்பினும் தக்காளியின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட தொழிலாளிகள் மீது புகார் அளிக்க முன்வரவில்லை. இதனால் போலீசார் அவர்களை கைது செய்யவில்லை. நாடு முழுவதும் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தக்காளியை திருட முயன்ற தொழிலாளர்கள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்