ரூ.16 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் 2 பேர் கைது

ரூ.16 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் மும்பை, தானேயை சேர்ந்த 2 பேரை போலீசாா் கைது செய்து உள்ளனர்.

Update: 2023-10-13 19:15 GMT

மும்பை, 

ரூ.16 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் மும்பை, தானேயை சேர்ந்த 2 பேரை போலீசாா் கைது செய்து உள்ளனர்.

ரூ.16 ஆயிரம் கோடி மோசடி

தானேயில் செயல்படும் நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பணப்பரிவர்த்தனை செயல்பாட்டை முடக்கி ரூ.25 கோடி மோசடி செய்யப்பட்டது. இது குறித்து தனியார் நிறுவனத்தினர் ஸ்ரீநகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி கும்பல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை செயல்பாட்டை முடக்கி கடந்த சில ஆண்டுகளில் ரூ.16 ஆயிரத்து 180 கோடி மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

2 பேர் கைது

சம்பவம் குறித்து போலீசார் மோசடி, குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மோசடியில் வங்கியில் 10 ஆண்டுகளாக வேலை பார்த்த ஜித்தேந்திர பாண்டே உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கூறினர். இந்தநிலையில் போலீசார் மோசடியில் தொடர்புடைய பயந்தரை சேர்ந்த அனுப் துபே (26), மும்பையை சேர்ந்த சஞ்சய் நாம்தேவ் கெய்க்வாட் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்