அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 11 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - மந்திரி தனாஜி சாவந்த் தகவல்
அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 11 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மந்திரி தனாஜி சாவந்த் கூறினார். மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி தனாஜி சாவந்த் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மும்பை,
அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 11 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மந்திரி தனாஜி சாவந்த் கூறினார்.
மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி தனாஜி சாவந்த் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காலியிடங்கள்
மராட்டியத்தில் உள்ள பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 949 இடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். இவை சி மற்றும் டி குரூபில் உள்ள 60 வகையான பணியிடங்கள் ஆகும். நர்ஸ், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்பம் சாராத ஊழியர்கள் இந்த பணியிடங்களில் அடங்குவர்.
விரிவான தகவல்
காலியிடங்களை நிரப்புவது தொடர்பான விரிவான தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும். ராஜேஷ் தோபே சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த முந்தைய ஆட்சி காலத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் நடந்த முறைகேடுகளால், அந்த ஆட்சேர்ப்பு நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டியதாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.