மும்பையில் 10 சதவீத குடிநீர் வெட்டு அமல்

ஏரிகளில் தண்ணீர் வற்றி இருப்பதை அடுத்து மும்பையில் 10 சதவீத குடிநீர் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-06-25 12:38 GMT

மும்பை, 

ஏரிகளில் தண்ணீர் வற்றி இருப்பதை அடுத்து மும்பையில் 10 சதவீத குடிநீர் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏரிகளில் வற்றிய தண்ணீர்

மும்பை கடந்த 11-ந் தேதி பருவ மழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. எனினும் நகரில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. குறிப்பாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த அளவு தான் மழை பெய்தது. வழக்கமாக ஜூன் மாதம் பெய்யும் மழையை விட இந்த ஆண்டு 70 சதவீதம் குறைவான மழையே பெய்து உள்ளது.

தற்போது மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மொத்த கொள்ளளவில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது.

குடிநீர் வெட்டு அமல்

ஏரிகளில் தண்ணீர் குறைவாக உள்ளதை அடுத்து மும்பையில் நாளை மறுநாள் (திங்கள்) முதல் 10 சதவீத குடிநீர் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஏரிகளின் நீர் மட்டம் 10 சதவீதத்திற்கு கீழ் சென்று உள்ளது. மேல் வைத்தர்ணாவில் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் இல்லை. எனவே பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் " என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்