பெண்கள் சுயநலத்துடன் வாழ வேண்டும் மந்திரி எச்.சி.மகாதேவப்பா பேச்சு

பெண்கள் சுயநலத்துடன் வாழ வேண்டும் என மந்திரி எச்.சி.மகாதேவப்பா கூறினார்.

Update: 2023-10-16 18:45 GMT

மைசூரு:

தசரா விழா

மைசூரு தசரா விழாவையொட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ஜே.கே. மைதானத்தில் மகளிர் தசரா விழா தொடங்கப்பட்டது. இந்த விழாவை மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பெண்கள் சுயநலத்துடன் வாழ வேண்டும். 

யார் மீதும் அதிக நம்பிக்கை வைத்து, அவர்களை நம்பி இருக்கக் கூடாது. அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு கல்வி கட்டாயம் கற்க வேண்டும்.

மைசூரு தசரா என்றால் மகாராஜா நால்வடி கிருஷ்ணராஜ உடையார் நினைவுப்படுத்திய நிகழ்ச்சிகள் தான். பெண்களின் படிப்பிற்காக, நால்வடி கிருஷ்ணராஜா உடையார் நன்கொடைகள் வழங்கி உள்ளார். சாவித்திரி பாயி பூலே, மற்றும் ஜோதி பாபூலே இருவரும் 1830- ம் ஆண்டில் பெண்கள் மீது நடந்து கொண்டிருந்த கொடுமைகளை கண்டித்தனர். அதை எதிர்த்து பெண்கள் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பெண்களுக்காக கல்வி மையங்களை அவர்கள் திறந்தனர்.

கல்வி கற்றுக் கொடுத்தவர்

பெண்களுக்கு முதன்முறையாக கல்வி கற்றுக் கொடுத்தவர் சாவித்திரி பாயி பூலே ஆவார். அம்பேத்கர் பெண்கள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். தற்போது பெண்கள் வளர்ச்சி பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். மகளிர்களிடம் பல்வேறு திறமைகள் உள்ளன. காங்கிரஸ் அரசு மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

விளையாட்டு, கலை, சாகித்யம், போன்ற அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை புரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மகளிர் தசராவில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த உணவு, தின்பண்டங்கள், கலை, கைவினை பொருட்கள், ஆடைகள், ஆயுர்வேத மருத்துவ குணம் உள்ள பொருட்கள் என 40-க்கும் மேற்பட்ட உணவு கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி துணை மேயர் ரூபா தொடங்கி வைத்தார்.

கோலப்போட்டி

மைசூரு தசரா விழாவையொட்டி அரண்மனை வளாகம், கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகம் ஆகிய இடங்களில் நேற்று கோலப்போட்டி நடந்்தது. போட்டியில் பெண்கள், இளைஞர்கள் பலர் வண்ண வண்ண கலர்களில் கோலம் போட்டனர்.

இதில் கோவில் கோபுரம், மன்னர், மயில்கள், வாத்து, பொம்மைகள், கர்நாடகம், இந்தியா வரைபடங்கள், மைசூரு அரண்மனை போன்றவை இடம்பெற்றிருந்தன. இந்த போட்டியில் சிறந்த கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கோலப்போட்டிக்கான ஏற்பாடுகளை கன்னட கலாசாரத்துறை செய்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்