ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வீரர்களை ஏலம் விட தடை கோரிய பொதுநல மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வீரர்களை ஏலம் விட தடை கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-07 15:28 GMT

பெங்களூரு:

கர்நாடக ஐகோர்ட்டில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலரான வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை ஏலம் விடுவது சட்டத்திற்கு எதிரானதாகும். பொருட்களை போன்று வீரர்களை ஏலம் விடுகிறார்கள். மனிதரை ஏலம் விடுவது மனித குலத்தின் உரிமையை மீறுவதாகும். எனவே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை ஏலம் விட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு இருந்தது. இதையடுத்து, அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) அலோக் ஆராதே, நீதிபதி ஜி.எம்.ஹாஜி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வீரர்களை ஏலம் விடுவதற்கு தடை விதிக்க கோரி வாதிட்டாா்.

ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. வீரா்களை ஏலம் விடும் பணியும் நடக்கவில்லை. ஏற்கனவே வீரர்ளை ஏலம் விடுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது. அதனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களை ஏலம் விடுவதற்கு தடை விதிக்க முடியாது என்றனர். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவும் தள்ளுபடி செய்யப்படுவதாக தலைமை நீதிபதி அலோக் ஆராதே உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்