துணைவேந்தர்கள் குழு கர்நாடகம் வருகை மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி

லண்டன் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் குழு கர்நாடக வருவதாக மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-30 16:03 GMT

பெங்களூரு:

உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாரயாண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

லண்டனில் நடைபெற்ற உலக கல்வி மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். அதன் பயனாக லண்டன் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் குழு வருகிற 9, 10-ந் தேதிகளில் கர்நாடகம் வருகிறது. அப்போது உயர்கல்வியை சர்வதேச தரத்திற்கு உயர்த்த இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்படும். அதேபோல் லண்டன் அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் குழு வருகிற செப்டம்பர் மாதம் கர்நாடகம் வரவுள்ளது.

தேசிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களையும், கல்வியின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைப்படி வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தியா சிறந்த கல்வி தலமாக மாற்றப்படும். நான் லண்டன் சென்று இருந்தபோது பல்வேறு கல்வி நிலையங்களுக்கு சென்று இருந்தேன். அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினேன். அதன் மூலம் கிடைத்த தகவல்கள் நமது மாநிலத்தில் உயர்கல்வித்துறையின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்