'கிரிப்டோகரன்சி'யில் முதலீடு செய்ய கூறி-வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த முகநூல் நண்பர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-22 17:11 GMT

பெங்களூரு:

பெங்களூரு எலகங்கா பகுதியில் வசித்து வருபவர் யஷ்வந்த்(வயது 27). இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் ஒரு வாலிபரின் பழக்கம் கிடைத்தது. பின்னர் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். இந்த நிலையில் யஷ்வந்த்தை தொடர்பு கொண்டு பேசிய முகநூல் நண்பர், கிரிப்டோகரன்சியில் பணம் முதலீடு செய்தால் அது இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய யஷ்வந்த்தும், தனது முகநூல் நண்பர் கூறிய வங்கிக்கணக்கிற்கு ரூ.2 லட்சம் வரை அனுப்பினார்.

ஆனால் யஷ்வந்த்திற்கு பணம் இரட்டிப்பாக கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து யஷ்வந்த் தனது முகநூல் நண்பரிடம் கேட்டார். ஆனால் இதற்கு நண்பர் சரியாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. அப்போது தான் முகநூல் நண்பர், தன்னை ஏமாற்றி ரூ.2 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வடகிழக்கு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்