போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான வாலிபருக்கு ஜாமீன் மறுப்பு: கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான வாலிபருக்கு ஜாமீன் மறுத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-01 17:33 GMT

பெங்களூரு:

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே வசித்து வருபவர் ரப்சல் (வயது 34). இவர் போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக கடந்த 2021-ம் ஆண்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஜாமீன் கேட்டு ரப்சல் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ரப்சல் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து மீண்டு வர மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வேண்டி உள்ளது. இதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடந்து வந்தது.

மனு மீதான இறுதி விசாரணையின் போது நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், போதைப்பொருள் பயன்படுத்துவதில் இருந்து மீண்டு வர மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்று மனுதாரர் கேட்டு உள்ளதற்கு அனுமதி அளிக்கிறேன். ஆனால் இந்த காரணத்தை கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. சிகிச்சை பெற அவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவர் முழுமையாக சிகிச்சை பெறாவிட்டால் அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வழங்கிய சலுகை ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்