பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
குருவிநத்தம் பகுதியில் பெண்யை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.
பாகூர்
பாகூர் அடுத்த குருவிநத்தம் வாழப்பட்டு வீதியை சேர்ந்தவர் ராணி. இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் தேன்மொழி திருமணமாகி புதுச்சேரியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர், தனது தாயாரை பார்ப்பதற்காக வாழப்பட்டு கிராமத்துக்கு வந்தார். அப்போது தாயார் ராணியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது அண்ணன் சண்முகம் மனைவி கீதா, அவரது மகன் மாதவன், சகோதரி அழகம்மாள், அவரது மகன் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து தேன்மொழியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து தேன்மொழியை தாக்கினர். இதில் காயம் அடைந்த தேன்மொழி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கீதா உள்பட 4 பேர் மீது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.