மூதாட்டியை கொன்ற 2 பேர் பிடிபட்டனர்

பெங்களூருவில் மூதாட்டியை கொன்ற 2 பேர் பிடிபட்டனர்.

Update: 2022-06-27 15:30 GMT

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா சிக்கமுத்தேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கங்கம்மா (வயது 65). இவரது கணவர் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த நிலையில் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக கங்கம்மாவின் கணவருக்கும், சிக்கமுத்தேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கங்கம்மாவை, சுதாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து கொலை செய்து இருந்தனர். இதுகுறித்து தொட்டப்பள்ளாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுதாகர், அவரது சகோதரர் மாருதி ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்