இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டதால் இளைஞர் குத்திக்கொலை...!
கேரளாவில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டதால் இளைஞர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொச்சி,
கேரளா மாநிலம் கொச்சி தம்மனத்தை சேர்ந்த சஜின் ஷஹீர் என்பவருக்கும், கலூரை சேர்ந்த கிரண் ஆண்டனிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக முன் பகை இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் கிரண் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு குறித்து அவரிடம் கேட்பதற்காக சஜின் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, கிரண் சஜினை கத்தியால் குத்தியுள்ளார். அதேபோல் சஜினும் கிரணை கடுமையாக தாக்கியுள்ளார். இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சஜின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் இந்த கொலை கடந்த ஒரு மாதத்தில் கொச்சியில் நடைபெற்ற 6-வது கொலை என்பது குறிப்பிடத்தக்கது.