தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அசாருதீன் (வயது 29). இவர் அப்பகுதியில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அசாருதீன் மீது வழிப்பறி, தொடர் திருட்டு, கொலை முயற்சி உள்பட 23 வழக்குகள் மங்களூரு, உடுப்பி நிலுவையில் உள்ளன. தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக அவரை அசாருதீனை கைது செய்ய மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், அவரை பிடிப்பதற்கு மங்களூரு வடக்கு உதவி கமிஷனர் மனோஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரசாத், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுன், போலீசார் அஜித், மணிகண்டன், கார்த்திக் ஆகியோரால் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அசாருதீனை தீவிரமாக தேடி வந்தது. இந்தநிலையில் நேற்று அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.