மைசூருவில் இளைஞர் தசரா விழா வருகிற 27-ந்தேதி தொடக்கம்; போலீஸ் சூப்பிரண்டு சேத்தன் தகவல்

மைசூரு தசரா விழாவையொட்டி இளைஞர் தசரா விழா வருகிற 27-ந்தேதி தொடங்க உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சேத்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-22 18:45 GMT

மைசூரு;

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டதால் இந்த ஆண்டு தசரா விழாவை வெகு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தசரா விழா தொடங்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால், அதையொட்டி பல நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தசரா விழாவையொட்டி இளைஞர் தசரா விழா வருகிற 27-ந்தேதி ெதாடங்க உள்ளது. இதற்காக மைசூரு மகாராஜா கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இதுகுறித்து இளைஞர் தசரா கமிட்டி தலைவரும், மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான சேத்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-


27-ந்தேதி தொடக்கம்

மைசூரு தசரா விழாவையொட்டி இளைஞர் தசரா விழா வருகிற 27-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இளைஞர் தசரா விழா தினமும் காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும். இளைஞர் தசரா தொடக்க விழாவில்மந்திரி எஸ்.டி.சோமசேகர் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் பிரபல நடிகர் கிச்சா சுதீப்பும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். முதல் நாளில் பரதநாட்டியம், பாடல்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடக்கும். மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்