கேரள பட்ஜெட்டை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் போராட்டம்
பல்வேறு பொருட்களின் வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர்.
எர்ணாகுளம் ,
கேரள சட்டசபை கூட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல்-மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் நிதி மந்திரி கே.என். பாலகோபால் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள பட்ஜெட்டை கண்டித்து எர்ணாகுளத்தில் இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடாத்தினர்.பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர்.