திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் வாலிபர் தற்கொலை

துமகூருவில் திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-08-11 21:16 GMT

துமகூரு:

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா ஜோனிகரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 28). தூவினகெரே பகுதியில் இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தார். இருப்பினும் அவருக்கு பெண் கிடைக்கவில்லை. 4 ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்தும் அமையாததால் மனம் உடைந்து காணப்பட்ட ஹேமந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் ஹேமந்த் தற்கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்