பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாக இளைஞர்கள் கருத்து கூறலாம் - பிரதமர் மோடி அழைப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் பங்களிக்குமாறு இந்திய இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-01-25 11:46 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பை காண்பித்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணியை தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாக இளைஞர்கள் கருத்து கூறலாம் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் பங்களிக்குமாறு இந்திய இளைஞர்களை அழைக்கிறேன். நமோ (NaMo) செயலியில் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.

எதிர்காலத்தில் சில பங்களிப்பாளர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான ஒரு லிங்க்கையும் (link) https://nm-4.com/2C1gAb அவர் பகிர்ந்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்