யூடியூப் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞர்கள் கைது
கர்நாடகாவில் யூடியூப் வீடியோக்கள் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
பெங்களூரு,
கர்நாடகா எல்லையான திருபாளையா என்ற பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கட்டட வேலை பார்த்து வந்தனர். இவர்கள் 5 பேரும் யூடியூப் வீடியோக்கள் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட திட்டமிட்டனர்.
அதன்படி, செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி, கர்நாடகா மாநிலம் ஆனெக்கல் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற போது, ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பினர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, நேற்று 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.