பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது

முல்கியில் பெண் குளிப்பதை ெசல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-05 18:45 GMT

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் முல்கி அருகே பக்ஷிகெேர பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு அவர் குளித்து கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த சுமந்த் பூஜாரி (வயது 22) என்பவர் குளியலறையின் தூவாரத்தின் மூலம் தனது செல்போனை வைத்து அந்த ெபண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.

இந்த நிலையில் குளியலறை தூவாரத்தில் செல்போன் இருப்பதை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் கத்தி கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தத்ைத கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுமந்த் பூஜாரி, அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனாலும் அக்கம்பக்கத்தினர் அவரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை பிடித்து முல்கி போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் சுமந்த் பூஜாரியிடம் இருந்து செல்போனை வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது அதில் பெண் குளிப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது.

இதைடுத்து போலீசார் சுமந்த் பூஜாரியை கைது செய்தனர். இதுகுறித்து முல்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்