காதலிக்காக செல்போன்கள் திருடிய வாலிபர் கைது
பெங்களூருவில் காதலிக்காக செல்போன்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
பெங்களூரு ஜே.பி.நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் செல்போன் கடையில் திருடிய அப்துல் முனாப் என்பவரை கைது செய்துள்ளனர். இவர், ஒரு இளம்பெண்ணை காதலித்து வருகிறார். காதலிக்கு செல்போன் தேவைப்பட்டதாலும், அவருக்கு செலவு செய்ய பணம் தேவைப்பட்டதாலும், ஜே.பி.நகரில் உள்ள செல்போன் கடையில் அப்துல் முனாப் திருடி இருந்தார். அந்த கடைக்கு 22-ந் தேதி இரவு வாடிக்கையாளர் போல் சென்ற அப்துல் முனாப், கழிவறைக்குள் சென்று இருந்து கொண்டார்.
இரவில் கடையை அடைத்துவிட்டு உரிமையாளா் சென்றபோது, விலை உயர்ந்த செல்போன்களை திருடி வைத்து கொண்டு, மறுநாள் காலையில் கடையை திறந்ததும் வெளியே தப்பி ஓடியது தெரியவந்தது. கைதான அப்துல் முனாப்பிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 6 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.