பிரதமர் மோடியால் தான் மக்கள் உயிருடன் இருக்கிறார்கள் - பிரதமருக்கு புகழாரம் சூட்டிய பீகார் மந்திரி!

மற்ற நாடுகளை விட கொரோனா பெருந்தொற்றை இந்தியா திறம்பட கையாண்டுள்ளது என்றார்.

Update: 2022-07-31 10:06 GMT

பாட்னா,

பிரதமர் மோடி செயல்படுத்திய கொரோனா தடுப்பூசி நடவடிக்கை காரணமாகவே மக்கள் உயிர்பிழைத்திருக்கின்றனர் என்று பிரதமருக்கு பீகார் மாநில மந்திரி ஒருவர் புகழாரம் சூட்டினார்.

பீகார் மாநில மந்திரி ராம் சூரத் ராய் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது,

"நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்றால், அந்த பெருமை நரேந்திர மோடிக்கே சேரும், அவர் கொரோனா தொற்றுநோய்களின் போது தடுப்பூசியை உருவாக்கி, இலவசமாக தடுப்பூசியை வழங்கினார்" என்றார்.

மேலும் மற்ற நாடுகளை விட கொரோனா பெருந்தொற்றை இந்தியா திறம்பட கையாண்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்